தற்போது வரை நாம் ஒரு கடையில் அல்லது வணிக வளாகத்தில் UPI மூலம் பணம் செலுத்த வேண்டுமென்றால் (UPI பேமெண்ட்), ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வசதி கட்டாயமாக இருக்க வேண்டும். மேலும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) அல்லது பேடிஎம் (Paytm) போன்ற ஏதேனும் ஒரு செயலியைத் திறந்து, கியூ-ஆர் குறியீட்டை (QR code) ஸ்கேன் செய்து, PIN எண்ணை உள்ளீடு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதற்கு மாற்றாக ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள ‘டேப் அண்ட் பே’ (UPI Tap & Pay) வசதி மூலம், ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும், எந்தவொரு UPI செயலியை திறக்காமலேயும் மிக எளிதாகப் பணம் செலுத்த முடியும்.
அதாவது ‘டேப் அண்ட் பே’ என்பது கார்டை ஸ்வைப் செய்யாமல் மெஷின் அருகில் கொண்டு செல்வதன் மூலம் பணத்தைச் செலுத்தும் NFC தொழில்நுட்பமாகும். இதற்கு போனில் மொபைல் இணையம் தேவையில்லை, POS இயந்திரத்தின் இணைய இணைப்பு மூலம் பரிவர்த்தனை நடைபெறும்.
