சென்னை: சென்னையில் இன்று (செப் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 14,170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில், நேற்று முன்தினம் (செப் 10) ஆபரண தங்கம் கிராம், 14 ஆயிரத்து 255 ரூபாய்க்கும், சவரன், 1 லட்சத்து 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (செப் 11) காலை, தங்கம் கிராமுக்கு 240 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,920 ரூபாய் சரிவடைந்து, 1 லட்சத்து 12 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 245 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மாலை, தங்கம் விலை கிராமுக்கு, 140 ரூபாய் உயர்ந்து, 14 ஆயிரத்து 155 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து, 1 லட்சத்து 13 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 250 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (செப் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 14,170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றிமின்றி ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
