IND vs AFG 1st T20 – இந்திய உத்தேச 11 அணி: சஞ்சு சாம்சனுக்கு புது ரோல்? 2 வீரர்களுக்கு அரிய வாய்ப்பு – india team predicted playing 11 vs afghanistan team for 1st t20

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டி, வரும் செப்டம்பர் 13ஆம் தேதி, டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்த முதல் டி20 போட்டிக்கான, இந்திய அணி பிளேயிங் 11-ல் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஓபனர்கள் இடம்: ஓபனர்கள் இடங்களில் எந்த பிரச்சினையும் இருக்காது. வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா ஆகியோர் ஓபனர்களாக இருப்பார்கள். இந்த இருவர் இடத்தை, உறுதி செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

சாம்சனுக்கு புது ரோல்: அதேநேரத்தில், டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சனையும் புறக்கணிக்க முடியாத நிலையில் பிசிசிஐ இருக்கிறது. இதனால், சஞ்சு சாம்சனுக்கு இனி ஒன்டவுன் இடத்தை கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில், இஷான் கிஷனை பேக்கப் விக்கெட் கீப்பராக வைத்துவிட்டு, சஞ்சு சாம்சனுக்கு மூன்றாவது இடத்தை கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.

வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகிய மூன்று பேரும் இடது கை பேட்டர்களாக இருக்கிறார்கள். இதனாலும், சாம்சனுக்கு மூன்றாவது இடத்தை கொடுத்து, இடது, வலது கை காம்பினேஷனை உருவாக்க கம்பீர் முடிவு செய்துள்ளாராம்.

மிடில் வரிசை: திலக் வர்மா, ஷிவம் துபே இருவரும் இடது கை பேட்டர்களாக இருக்கிறார்கள். இதனால், திலக் வர்மாவை 4ஆவது இடத்தில் ஆட வைத்துவிட்டு, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு 5ஆவது இடத்தையும், ஷிவம் துபேவுக்கு 6ஆவது இடத்தையும் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது.

நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருப்பார்கள்.

பௌலர்கள் இடம்: அர்ஷ்தீப் சிங், ஜஸ்பரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் முழுநேர பௌலர்களாக இருப்பார்கள்.

2 வீரர்களுக்கு அரிய வாய்ப்பு: ஷிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு, இத்தொடர் அரிய வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஷிவம் துபே, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் இத்தொடரில் தனது திறமையை நிரூபிக்க வேண்டும். மேலும், அர்ஷ்தீப் சிங்கிற்கும் இத்தொடர் மிகமுக்கியமான தொடராக இருக்கிறது. இத்தொடரிலும் அதிக ஒயிட்களை வீசி, அதிக ரன்களை விட்டுக்கொடுத்தால், அடுத்து அவருக்கு வாய்ப்பே கிடைக்காது என்ற நிலைமைதான் இருக்கிறது.

இந்திய உத்தேச 11 அணி: வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ஷிவம் துபே, நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 13, 15, 17 ஆகிய தேதிகளில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில்தான் நடைபெறும். போட்டிகள் அனைத்தும், இந்திய நேரப்படி, இரவு 7 மணிக்கு துவங்கும்.

இத்தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பு செய்யு். பான்கோன் ஆப் மூலமும் இத்தொடரை நேரலையில் பார்க்க முடியும்.

இந்திய அணிக்கு சவால்: சமீபத்தில், இந்திய அணி அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்களில் ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை. ஆப்கானிஸ்தான் அணியால், சுழலுக்கு சாதகமாக பிட்ச்களில் அபாரமாக செயல்பட முடியும் என்பதால், இத்தொடர் இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Source link