Ganesh chaturthi mantra 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய விநாயகர் வடிவமும் சொல்ல வேண்டிய மந்திரமும்

இந்து மதத்தில் எந்த ஒரு காரியத்தை துவங்குவதாக இருந்தாலும், வழிபாடுகளை துவங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகப் பெருமானை வணங்கி, வழிபட்டு விட்டு தான் துவங்க வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. விநாயகரை எந்த வடிவத்தில் நான் பிரதிஷ்டை செய்து வைத்து வழிபட்டாலும் அவர் அருள் செய்வார் என்றாலும், ராசி மண்டலத்தின் படி சில குறிப்பிட்ட விநாயகர் வடிவங்கள், குறிப்பிட்ட ராசிகளுக்கு மிகுந்த பலனை தரும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களின் ராசிக்குரிய விநாயகர் வடிவம் எது என்பதை தெரிந்து கொண்டு, அந்த வடிவத்தையும், அந்த விநாயகருக்குரிய மந்திரத்தையும் தொடர்ந்து சொல்லி வந்தால் அளவில்லாத நல்ல பலன்களை பெற முடியும் என சொல்லப்படுகிறது.

12 ராசிகளுக்கான விநாயகர் வடிவமும், மந்திரமும் :

மேஷம் – சம்மந்த விநாயகர். “ஓம் கம் சம்மந்த விநாயகரே நமஹ”

ரிஷபம் – சித்தி புத்தி விநாயகர். “ஓம் கம் சித்தி புத்தி விநாயகரே நமஹ”

மிதுனம் – த்விஜ கணபதி. “ஓம் கம த்விஜ கணபதியே நமஹ”

கடகம் – ஹரித்ரா கணபதி. “ஓம் கம் ஹரித்ரா கணபதியே நமஹ”

சிம்மம் – வலம்புரி கணபதி. “ஓம் கம் வலம்புரி கணபதியே நமஹ”

கன்னி – கன்னி மூல கணபதி. “ஓம் கம் கன்னி மூல கணபதியே நமஹ”

துலாம் – லக்ஷ்மி கணபதி. “ஓம் கம் லக்ஷ்மி கணபதியே நமஹ”

விருச்சிகம் – விஜய கணபதி. “ஓம் கம் விஜய கணபதியே நமஹ”

தனுசு – ஞான கணபதி. “ஓம் கம் ஞான கணபதியே நமஹ”

மகரம் – வீர கணபதி. “ஓம் கம் வீர கணபதியே நமஹ”

கும்பம் – உத்தண்ட கணபதி. “ஓம் கம் உத்தண்ட கணபதியே நமஹ”

மீனம் – நிருத்த அல்லது நர்த்தன கணபதி. “ஓம் கம் நர்த்தன கணபதியே நமஹ”

விநாயகர் சதுர்த்தி, சதுர்த்தி விரதம், சங்கடஹர சதுர்த்தி, புதன்கிழமை உள்ளிட்ட நாட்களில் இந்த மந்திரங்களை 108 முறை சொல்லி வழிபடலாம். அதே போல் அவரவர் பிறந்த நட்சத்திரம் வரும் நாட்களிலும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு, இந்த மந்திரங்களை சொல்லலாம். முடிந்தவர்கள் தினமும் சொல்லி வழிபட்டு வந்தால் இன்னும் விரைவாக விநாயகரின் அருள் கிடைக்கும்.

விநாயகர் காயத்ரி மந்திரம் :

‘ஓம் ஏக தந்தாய வித்மஹே

வக்ர துண்டாய தீமகி

தன்னோ தந்தி ப்ரஜோதயாத்”

விநாயருக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ய புத்தி கூர்மை மற்றும் ஞானம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தங்களின் ராசி, நட்சத்திரம் தெரியாதவர்கள் பொதுவான இந்த சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபட்டு வரலாம்.

Source link