விஜய் பாதிக்கப்பட்டவர் இல்லை.. உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார் திருமாவளவன்: இடும்பாவனம் கார்த்திக் சொன்ன பாயிண்ட் – ntk idumbavanam karthik comment on thirumavalavan speech about karur incident

நேற்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எம்பி திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியது. குறிப்பாக கரூர் பேரவலத்தின் போது விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய சொன்னேன். ஆனால் கடந்த திமுக அரசு அதனை செய்யவில்லை. அப்போதே விஜய்யை அம்பலப்படுத்தி இருக்க வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் பேசியது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

திருமாவளவன் பேச்சு

அதோடு அவருடைய பேச்சு தொடர்பாக இணையத்தில் பல விதமான விமர்சனங்களும் எழுந்துள்ளன. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய சொல்லிவிட்டு, இப்போது அவருடனே கூட்டணி அமைத்து இருக்கிறீர்கள் என இணையவாசிகள் பதிவுகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நாதகவை சார்ந்த இடும்பாவனம் கார்த்திக், விசிக தலைவர் திருமாவளவனின் பேச்சு குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

இடும்பாவனம் கார்த்திக் பதிவு

அவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது. அதில் திருமாவளவன் குறிப்பிட்டு இருப்பதாவது, கரூர் பேரவலத்தில் விஜய்யை ஏன் கைது செய்யவில்லை? என மீண்டும் ஒருமுறை அண்ணன் திருமா கேட்டிருக்கிறார். ஆம் அரசியல் லாப நட்டக் கணக்கினை பார்த்து ஒரு வழக்கு கூட விஜய் மீது போடாத திமுக அரசுடைய செயல் பச்சைத்துரோகம். வரலாற்று குற்றம் என கடும் விமர்சனத்தை தனது பதிவில் இடும்பாவனம் கார்த்திக் முன்வைத்துள்ளார்.

கரூர் விபத்துக்கு காரணமான முதன்மைக் குற்றவாளி

தொடர்ந்து அவருடைய பதிவில், விஜய்யை ஏன் கைது செய்யவில்லை என கேட்பதன் மூலமாக கரூர் மரணங்களை பொறுத்தவரை, விஜய் பாதிக்கப்பட்டவர் இல்லை. அந்த விபத்துக்கு காரணமான முதன்மைக் குற்றவாளி எனும் உண்மையை திருமா ஒப்புக் கொண்டிருக்கிறார். இவ்வாறு தனது பதிவில் இடும்பாவனம் கார்த்திக் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த போஸ்ட் சோஷியல் மீடியாவில் வைரலாக, பலவிதமான கமெண்ட்கள் குவிய ஆரம்பித்துள்ளது.

கூட்டணி உடைய திமுகவே காரணம்

முன்னதாக நேற்றைய தினம் திருமாவளவன் பேசுகையில் திமுக கூட்டணி உடைவதற்கு திமுகவே காரணம். கூட்டணி கட்சிகளுடனான அவர்களின் அணுகுமுறை சரியல்ல. திமுக எங்களை கைவிட்டு விட்டது என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தார். அதோடு கரூர் பேரவலத்தின் போது விஜய் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் கூறினேன். ஆனால் வழக்குப்பதிவு செய்யாமல் விட்டு விட்டார்கள். விஜய்யை அப்போதே அம்பலப்படுத்தி இருக்க வேண்டாமா என கேட்டிருந்தார்.

TTV வெளியிட்ட அறிக்கைவிஜய் மீது என்ன கோபம்? இதுதான் காரணமா ?

விஜய்யை கணிக்க தவறி விட்டது

அதோடு விஜய்யை சரியாக கணிப்பதற்கு திமுக தவறி விட்டது. இதுவே அவர்களுடைய தோல்விக்கு காரணம் எனவும் கருத்தினை தெரிவித்து இருந்தார். திருமாவளவனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பல விதமான விவாதங்கள் கிளம்பியது. அதோடு கரூர் சம்பவத்தின் போது விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய சொன்னேன் என அவர் பேசியுள்ளது பெருமளவில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருமாவளவனின் இந்த பேச்சின் மூலமாக விஜய் முதன்மை குற்றவாளி என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என இடும்பாவனம் கார்த்திக் கருத்தினை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link