கூட்டணி உடைய திமுக காரணமில்லை – திருமாவிற்கு கே. என். நேரு பதிலடி – dmk ex minister k n nehru about mp thirumavalavan allegation

திமுகவின் கூட்டணி கட்சிகள் பிரிந்து செல்ல திமுகதான் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று பேசியிருந்தார். அதுகுறித்து முன்னாள் அமைச்சர் கே. என். நேரு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

திமுக உடனான விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் கூட்டணி உடைந்ததற்கு திமுகதான் காரணம் என நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எம்பி திருமாவளவன் பேசியிருந்தார்.

இதுகுறித்து இன்று திமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான கே. என். நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திருமாவளவன் சென்று இருக்கும் இடத்தை மகிழ்ச்சிப்படுத்தவே அவர் அப்படி பேசுகிறார் என்றார். தொடர்ந்து திமுக என்றும் கூட்டணிக் கட்சிகள் உடைய காரணமாக இருந்ததில்லை, இனி இருக்கவும் இருக்காது என தெரிவித்தார்.

Source link