முதல்வர் விஜய்யைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக போரா*ட்டம்!

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது அவர், கடந்த கால திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

குறிப்பாக திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று முதல்வர் விஜய் குற்றம் சாட்டினார். இதில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசும் போது,  மு.க.ஸ்டாலினைச் சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாகப் உடல்மொழி செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, முதல்வர் விஜய்யைக் கண்டித்து மாநிலம் முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்திருந்தது. அந்த வகையில் இன்று (12-09-26) சென்னை, திருச்சி, கோவை, மதுரை என மாநிலம் முழுவதும் திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் போது முதல்வர் விஜய்க்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Source link