டில்லியில் துவங்கியது பிரிக்ஸ் மாநாடு; உலக தலைவர்களை வரவேற்றார் பிரதமர் மோடி

புதுடில்லி: டில்லியில் 2 நாள் நடக்கும் பிரிக்ஸ் மாநாடு இன்று (செப் 12) துவங்கியது; மாநாட்டில் பங்கேற்க வந்த உலக தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.

பிரே சில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய அமைப்பு, ‘பிரிக்ஸ்’ எனப்படுகி றது. 2024ல், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் கூட்டமைப்பில் இணைந்தன. இந்தாண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு இந்தியா தலைமை பொறுப்பு ஏற்று நடத்துகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

தற்போது 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டில்லி பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் துவங்கியது. நாளை நிறைவடைகிறது. மாநாட்டில் பங்கேற்க வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா உள்ளிட்ட உலக தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.

உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் டில்லியில் முகாமிட்டுள்ளதை தொடர்ந்து, டில்லி மாநகரம் முழுதும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Source link