மதுராந்தகம்- ஆதவ் அர்ஜுனா; தாராபுரம்- அருண்ராஜ்; செங்கோட்டையனுக்கும் முக்கிய அசைன்மென்ட்: இடைத் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்த விஜய்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் வருகிற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களம் காண அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, ஆளும் கட்சியாக த.வெ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் களத்தில் இறங்கி வேலை செய்யும் பொறுப்பாளர்களை அறிவித்து இருக்கிறது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும் முதல் அமைச்சருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:- 

தேர்தல் கண்காணிப்பாளர்கள்:
அமைச்சர் என்.ஆனந்த்
அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் நிர்மல் குமார்

தேர்தல் பணிக்குழு

மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி:
பொறுப்பாளர்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

இணைப் பொறுப்பாளர்கள்:

அமைச்சர் ராஜ்குமார்
அமைச்சர் தென்னரசு
அமைச்சர் வினோத்

துணைப் பொறுப்பாளர்கள்:

எம்.எல்.ஏ சரவணமூர்த்தி;
எம்.எல்.ஏ தியாகராஜன்
எம்.எல்.ஏ விஜயராஜ்
எம்.எல்.ஏ காமாட்சி
எம்.எல்.ஏ பாலாஜி (எ) மணிகண்டன்

தாராபுரம்

பொறுப்பாளர்: அமைச்சர் அருண்ராஜ்

இணைப் பொறுப்பாளர்கள்:

1. அமைச்சர் விஜய் பாலாஜி
2. அமைச்சர் விஜயலட்சுமி
3. அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

துணைப் பொறுப்பாளர்கள்:

1..பாலமுருகன் எம்.எல்.ஏ. -திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
2. சத்தியபாமா எம்.எல்.ஏ -திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி
3. ராம்குமார் எம்.எல்.ஏ, -பல்லடம் சட்டமன்றத் தொகுதி
4. திலீப் எம்.எல்.ஏ -நாமக்கல் சட்டமன்றத் தொகுதி
5. சத்யா எம்.எல்.ஏ, -கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி

மேற்கண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள், இரண்டு தொகுதிகளின் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பார்கள். அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். விசில் சின்னம், மீண்டும் வாகை சூட வேண்டும். இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதிகளில் நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Source link