புதுடில்லி: மேற்காசியா மற்றும் வளைகுடா பகுதிகளில் அமைதி திரும்புவதற்காக பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இணைந்து பணியாற்ற தயார் என்று பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்து வரும் பிரிக்ஸ் மாநாட்டில் அவர் பேசியதாவது; மேற்காசியா மற்றும் வளைகுடா பகுதிகளில் அமைதியை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மேற்காசியாவில் நிலவும் போர் அப்பகுதி மக்கள் அனைவருக்கும் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இது சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு உகந்ததல்ல.
மேற்காசியாவிலும், வளைகுடா நாடுகளிலும் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதியில் அமைதியை அடைய மற்ற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது. பிரிக்ஸ் நாடுகள் வரலாற்றின் சரியான பக்கத்தில் உறுதியாக நிற்க வேண்டும். சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.
