சென்னை: மின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மல்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிர்மல் குமார் கூறியதாவது: காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, இரு நாட்களுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த பற்றாக்குறை தமிழகத்தில் மட்டும் அல்லாமல், பெரும்பாலான மாநிலங்களிலும் நிலவுகிறது.
நேற்று முன்தினம் மாலை, தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. அப்போது முதல், அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று மாலை முதல், மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதன் வாயிலாக, தமிழகத்தில் மின் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
