பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய 3 ஆண்டுகளாக காத்துக் கிடக்கும் பாகிஸ்தான்: வீட்டோ அதிகாரம் மூலம் முட்டுக்கட்டை போடும் இந்தியா

புதுடெல்லி: கடந்த 2006-ம் ஆண்​டில் இந்​தி​யா, சீனா, ரஷ்யா, பிரேசில் மற்​றும் தென்​னாப்​பிரிக்கா ஆகிய 5 வளரும் நாடு​கள் இணைந்து பிரிக்ஸ் கூட்​டமைப்பை உரு​வாக்​கின.

பின்​னர், கடந்த 2024-ல் எகிப்​து, எத்​தி​யோப்​பி​யா, ஈரான், ஐக்​கிய அரபு அமீரகம், சவுதி அரேபி​யா, இந்​தோ​னேசியா ஆகிய 6 நாடு​கள் உறுப்​பினர்​களாக இணைந்​தன.

பிரிக்ஸ் கூட்​டமைப்​பில் உறுப்​பினர்​களாக இருக்​கும் நாடு​கள், உலக வங்கி போன்ற பாரம்​பரிய மேற்​கத்​திய நாடு​கள் தலை​மையி​லான நிறு​வனங்​களைத் தவிர்த்​து, பிரிக்ஸ் ஆதரவு பெற்ற புதிய மேம்​பாட்டு வங்கி (என்​டிபி) வாயி​லாக கடன்​கள் மற்​றும் உள்​கட்​டமைப்பு நிதி​யுத​வியைப் பெற முடி​யும்.

இதனை மனதில் கொண்​டு, நீண்​ட​கால​மாக நிதி நெருக்​கடி​யில் தவித்து வரும் நமது அண்டை நாடான பாகிஸ்​தான், பிரிக்ஸ் கூட்​டமைப்​பில் உறுப்​பின​ராவதற்கு தீவிர​மாக முயற்​சித்து வரு​கிறது.

பிரிக்ஸ் கூட்​டமைப்​பில் இணைய பாகிஸ்​தான் கடந்த 2023-ம் ஆண்டே முறைப்​படி விண்​ணப்​பித்​தது. இதற்கு சீனா, ரஷ்யா போன்ற நாடு​கள் ஆதரவு தெரி​வித்​தா​லும், இது​வரை பாகிஸ்​தா​னால் உறுப்​பின​ராக முடிய​வில்​லை.

உறுப்​பின​ராகும் தனது முயற்​சிக்கு வலுசேர்க்​கும் வித​மாக பிரிக்ஸ் ஆதரவு பெற்ற புதிய மேம்​பாட்டு வங்​கி​யில் 580 மில்​லியன் டாலர் பங்​கு​களை பாகிஸ்​தான் வாங்​கி​யுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

ஆனாலும், எல்லை தாண்​டிய பயங்​கர​வாதம் உள்​ளிட்ட பிரச்​சினை​களை முன்​னிறுத்​தி, இந்​தியா தனது வீட்டோ அதி​காரத்​தைப் பயன்​படுத்தி பாகிஸ்​தான் முயற்​சிக்கு முட்​டுக்​கட்டை போட்டு வரு​கிறது.

பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் ஒரு​மித்த கருத்​தின் அடிப்​படையி​லான சேர்க்கை விதி​களின்​படி, இந்​தி​யா​வின் எதிர்ப்பு ஒரு தகர்க்க முடி​யாத தடை​யாக விளங்​கு​கிறது. அந்த விதி​களின்​படி, உறுப்பு நாடு​களின் ஒரு​மித்த ஆதரவு இருந்​தால் மட்​டுமே புதிய உறுப்​பினர்​களை கூட்​டமைப்​பில்​ சேர்க்​க முடி​யும்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Source link