“முதல்வர் விஜய் ஜெயிலுக்கு போவார் என ஜோதிடர் சொன்னதால் முன்கூட்டியே புழல் சென்றுள்ளார்”- துரைமுருகன்

வேலூர்: “நாங்​கள் அரசி​யலில் மலை முழுங்கி மகாதேவன்​கள். பல வழக்​கு​களை பார்த்​தவர்​கள். விஜய்க்கு எதையும் படிக்க நேரம் கிடையாது” என திமுக பொதுச்​செய​லா​ளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுரு​கன் பேசியுள்ளார்.

மேலும், “முதலமைச்சர் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்பதால், முன்கூட்டியே சிறைக்கு சென்று வாருங்கள் என்று ஜோதிடர் கூறியதால், அவர் புழல் சிறைக்கு சென்று வந்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார் துரைமுருகன்.

காட்​பாடி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசிய துரைமுருகன், “சட்டப்​பேர​வை​யில் போலீஸ் மானிய கோரிக்கையின்போது மாநிலத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசாமல் எப்​போதோ நடந்த சர்க்​காரியா கமிஷன், மிசா குறித்து முதல்​வர் பேசுகிறார்.

அவர் குறிப்​பிட்ட வழக்​கில் அனை​வரும் குற்​ற​வாளி​கள் அல்ல என விடு​தலை செய்​யப்​பட்ட பிறகு​தான் இவ்​வளவு நாள் நாங்​கள் அரசி​யல் செய்​கிறோம். அதையெல்​லாம் படிக்க அவருக்கு நேரம் கிடை​யாது. யாரோ 2 பேர் பேசுவதை வைத்துப் பேசுகிறார்.

முதல்​வர் விஜய் காவல் நிலை​யத்​துக்கு போகும் பழக்​கம் இல்​லை. ஒரு எஃப்​.ஐ.ஆர் கூட அவர் மீது கிடை​யாது. ஒரு 15 நாள் கூட அவர் சிறை சென்றது கிடையாது. தியாகத்தை பற்றி அவருக்கு என்ன தெரி​யும். ஏதோ அடித்த காற்​றில் கோபுரத்​தில் ஒட்ட வைத்​தது போல ஒட்​டியதால் இப்​படி பேசி வரு​கிறார். தியாகம் புரிந்​தவர்​களுக்கு தான் தியாகம் தெரி​யும்.

கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் கோபப்பட காரணம் அவர்​கள் தியாகம் புரிந்​தவர்​கள். இன்​றைக்​கும் தியாகம் புரிந்து கொண்​டிருப்​பவர்​கள் கம்​யூனிஸ்​டு​கள். எங்கள் தலைவர் குறித்த பேச்சுக்கு, அனைத்து கட் சிகளும் கண்டனம் தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை.
சட்டசபையில் மரபையும் விதியையும் மீறி நடந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர். சட்​டப்​பேர​வை​யில் இல்​லாதவர்​களைப் பற்றி பேசக்​கூடாது. அதை சபாநாயகரும் தடுக்கத் தவறி விட்டார். இதை காரணம் காட்டி முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தலாம்.

சட்டசபையில் நடந்ததையும், கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காததையும் திசை திருப்பவே கே.என்.நேரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. எங்களின் பெயர்களும் பட்டியலில் இருக்கிறதாம். நாங்கள் அரசியலில் மலை முழுங்கி மகாதேவன்கள். எத்தனையோ வழக்கை சந்தித்தவர்கள்.

பட்​டினப்​பாக்​கத்​தில் ரூ.1,200 கோடி​யில் சட்​டப்​பேரவை கட்​டு​வதற்கு பதிலாக 3 சிலிண்​டருக்கு பதிலாக 4 சிலிண்​டர்கள் கொடுக்க வேண்டியது தானே. தமிழகத்தில் நடைபெறும் 2 தொகுதிகளின் இடைத்​தேர்​தலில் திமுக வெல்லும்.

இந்த ஆட்சி ஜோதிடர் சொல்வதற்கு ஏற்றவாறு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்பதால், முன்கூட்டியே சிறைக்கு சென்று வாருங்கள் என்று ஜோதிடர் கூறியதால், புழல் சிறைக்கு சென்று வந்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.