“புதிய தலைமைச் செயலக திட்டத்தை கைவிடாவிட்டால் மீனவ மக்களை திரட்டி போராட்டம்” – சீமான் எச்சரிக்கை!

சென்னை: பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் அமைக்​கும் திட்​டத்தை அரசு கைவி​டா​விட்​டால் மீனவ மக்​களை திரட்டி நாம் தமி​ழர் கட்சி போராட்​டத்தை முன்​னெடுக்​கும் என அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்த தவெக அரசு, சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. மேலும், புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பட்டினப்பாக்கம் சுற்றுவட்டார மீனவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்​பாக சீமான் வெளி​யிட்டுள்ள அறிக்​கை​யில், “பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் அமைக்கப்​படும் என்று தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டிருப்​பது அதிர்ச்சி அளிக்​கிறது. தமி​ழ​கத்​துக்கு ரூ.10 லட்​சம் கோடி கடன் உள்​ள​தால் கொடுத்த வாக்​குறு​தி​களை நிறை​வேற்ற முடிய​வில்லை என்று தொடர்ந்து கூறிவ​ரும் தவெக அரசு, கடுமை​யான நிதி நெருக்​கடிக்கு மத்​தி​யில் ரூ.1,200 கோடிகளை வாரி இறைத்து அவசர க​தி​யில் புதிய தலை​மைச் செயல​கம் கட்ட வேண்​டிய அவசி​யம் என்ன?

செயின்ட் ஜார்ஜ் கோட்​டை​யில் கடும் இடநெருக்​கடி​யும், போக்குவரத்து நெரிசலும் ஏற்​படு​கிறது என்​றால், சாந்​தோம் தேவால​யம், பத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி, கல்​லூரி​கள், ஏராள​மான வணிக நிறு​வனங்​கள், தொழில் மையங்​கள், மீனவ மக்​களின் வியா​பாரத் தலங்​கள் என அதை​விட அதிக இடநெருக்​கடி​யும், போக்கு​வரத்து நெரிசலும் உள்ள பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலைமைச் ​செயல​கம் அமைக்​கப்​படு​வது மக்​களின் தேவைக்​கா? அல்​லது முதல்​வரின் தனிப்​பட்ட தேவைக்​கா?

முதல்​வரின் தனிப்​பட்ட நலனுக்​காக, நாட்டு மக்​களின் வரிப்​பணத்தை வீணடித்​து, கடும் இடநெருக்​கடி​யும், போக்​கு​வரத்து நெரிசலும், சுனாமி ஆபத்​தும் உள்ள பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் அமைக்​கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்​டும். இல்​லை​யென்​றால், பாதிக்கப்படும் பட்​டினப்​பாக்​கத்​தின் 9 கிராம மீனவ மக்​களை திரட்டி மாபெரும் போராட்​டத்தை நாம் தமி​ழர் கட்சி முன்னெடுக்கும்.

சேலம் எட்​டு​வழிச்​சாலை, பரந்​தூர் விமான நிலை​யம், கடலில் பேனா சிலை போன்​றவற்றை அமைக்​க​விட மாட்​டோம் என்​றோம். அமைக்​கப்​பட​வில்​லை. அதே​போல் பட்டினப்​பாக்​கத்​தில் தலை​மைச் செயல​கத்தை ஒரு​போதும் அமைய​விட​மாட்​டோம்” எனத் தெரிவித்துள்ளார்.