Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசியினர் யார், என்ன விதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
அழகு, செளந்தர்யம், சந்தோஷம், காதல் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய கிரகம் சுக்கிரம். இந்த சுக்கிர பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். மூல திரிகோணத்தில் இருக்கும் புதன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு, துலாம், புதன் இரு கிரகங்களும் சஞ்சாரம் செய்து டிசம்பர் 6 ஆம் தேதி வரை அமர்ந்து யோகத்தை தரப் போகின்றன.
புதனும், சுக்கிரனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பண வரவு உண்டாகும், திருமண யோகம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு இந்த 66 நாட்கள் அற்புதமாக இருக்கும்.
அந்த வகையில், இந்த லட்சுமி நரசிம்ம யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசியினருக்கு கிடைக்கப் போகும் நல்ல பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசியினருக்கு அருமையாக சம்பாதிக்க கூடிய மாதமாக இந்த 4 மாதம் அமையும். சுக்கிரனும், புதனும் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய பணங்கள் வந்து சேரும். புகழ், கெளரவம், மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய முயற்சிகளைச் செய்து வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். பரிசு, தானங்கள் வந்து சேரும். வெளிமாவட்டம், மாநிலம், வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். யூரோப் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
சொத்துகள் சேரும். காட்டேஜ் வாங்குவது, குளிர்பிரதேசத்தில் வீடு வாங்குவது போன்ற அமைப்புகள் உண்டாகும். நல்ல மணமகள் அமைவார்கள். காதல் திருமணம் ஏற்படும். உங்கள் மனைவிக்கு அருமையான யோகம் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் கணவருக்கு அற்புதமான ஏற்றம் ஏற்படும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். அடுத்த 4 மாதத்துக்கு ரசனையான, சுவையான உணவுகளை தேடிச் சென்று சாப்பிடுவீர்கள்.
உடம்பு கட்டுக்கோப்பாக மாறும். ஜிம்முக்கு செல்வது, டயட் இருப்பது போன்ற அமைப்பு உள்ளது. சுக்கிரன் வருவது, வக்கிரமாவது, வக்கிர நிவர்த்தியாவது, அதிசாரமாவது என அனைத்து விஷயங்களும் துலாம் ராசியிலேயே நடைபெறுகிறது. இதில், புதனும் இணைவதால் லட்சுமி நாராயண யோகம் உருவாவதால் அறிவுக்கூர்மை, புத்திசாலித்தனம், ஞானம் என எல்லாவற்றையும் தரப் போகிறார். கேட்பதற்கு முன்பே 100க்கு 100 நன்மைகளைத் தருவார்கள்.
கால் பாதம், பின்புற பகுதியில் வலி வருவதற்கான வாய்ப்புள்ளது. யாரிடமாவது கடன் கொடுத்திருந்தால் திருப்பி வசூல் செய்வதில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய நன்மைகள் நடக்கும். பெயர், பணம், புகழ் கிடைக்கும் அமைப்பு. வீட்டில் மகிழ்ச்சி பெருகும். காதல் வாழ்க்கை இனிக்கும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு பெரிய மாற்றத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கும்.
காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண யோகம் ஏற்படும். தொழில், வேலையில் ஏற்றம் ஏற்படும். வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பணம், மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு வாய்ப்பு ஏற்படும். 30 நாட்களுக்கு எதிரிகள் தொல்லை ஏற்படும். அதற்குப் பிறகு அற்புதமான ஏற்றம் ஏற்படும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 95 சதவீதம் ஏற்றம் ஏற்படும்.
சிம்மம் ராசியினருக்கு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு சித்ரவதையில் இருந்து வெளியில் வரும் காலகட்டமாக இருக்கும். இந்த 4 மாதங்கள் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். எதற்காகத்தான் வாழ்கிறோமோ என்ற மனநிலையில் இருந்திருப்பீர்கள். நிறைய வேதனைகள், ஏமாற்றம், பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். புதன் பகவான் 3 ஆம் இடத்துக்குச் சென்று சுக்கிரனோடு இணைவதால் அற்புதமான யோகங்கள் ஏற்படும்.
அடுத்த 4 மாதங்கள் உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய அற்புதமான மாதமாக இருக்கும். புதன், சுக்கிரன் இருவரும் 3 ஆம் இடத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் தெய்வ அனுக்கிரகம் அற்புதமாக இருக்கும். திருமண யோகம், குழந்தை பாக்கியம் ஏற்படும். விற்க முடியாத நிலம், இடங்கள், பூர்வீக சொத்துகளை விற்று பெரும் பணத்தைப் பார்க்கக்கூடிய காலகட்டம்.
மார்க்கெட்டிங், ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இளைய சகோதரிக்கு நல்ல வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல வரன்கள் அமையும். பக்கத்து ஊரில் இருந்து பெண், மாப்பிள்ளை கிடைப்பார்கள். இருசக்க வாகனம், கார் வாங்கக்கூடிய அமைப்பு ஏற்படும்.
மனம் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியதாக வரும் 4 மாதம் அமையும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். 28 ஆம் தேதி செப்டம்பர் வரைக்கும் பல், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் எடுக்கும் முடிவுகள், திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்த்தாலே எல்லா விஷயங்களும் நிச்சயமாக நடக்கும்.
கண்ணாடி மாற்றுவது, லென்ஸ் வாங்குவது, புதிய பிரேம் போடுவது போன்ற நல்ல அமைப்புகள் ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. உங்கள் வீட்டுக்கு இடதுபுறமாக இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். காதல், திருமணம் கைகூடும். தொழில் நன்றாக அமையும். அப்பார்ட்மென்ட் வாங்கும் அமைப்பு உள்ளது. இடம் விற்பனையாகும்.
நல்ல பெயர் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பேச்சினால் எதிரிகள் உருவாகும் வாய்ப்புள்ளதால் பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. புதிய உறவுகள் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதமும் நன்றாக இருக்கும்.
கும்பம் ராசியினருக்கு அடுத்த 4 மாதம் அற்புதமாக இருக்கும். டிசம்பர் மாதத்திற்குப் பிறகு ஞானிகளாக மாறக்கூடிய யோகம் உண்டாகும். இதுவரை உங்களை கேலி பேசியவர்கள், முதுகு குத்தியவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் அளவுக்கு மாற்றம் ஏற்படும். அடுத்த நான்கு மாதத்தில் விட்டுப்போன காதலன், காதலி திரும்பி வருவார்கள். பிரச்சனைகளில் இருந்த வீடு, பூர்வீக வீடு, தோட்டம் கைக்கு வரும்.
அப்பாவுடைய பொருள்கள், சாமான்கள், பொருளாதார விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு வந்து சேரும். சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். போன ஜென்மத்தில் உங்கள் துணையாக, காதலன், காதலியாக இருந்தவர்கள் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. வீடு, மனை, வாகனம், சொத்துகள் வாங்குவதற்கான யோகம் உள்ளது.
நிறைய தூர தேச பயணங்கள், வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பிரபலமாகக்கூடிய காலகட்டமாக இருக்கும். இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம், குலதெய்வத்தின் அனுக்கிரகம் அற்புதமாக இருக்கும். கும்ப ராசி பெண்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அடுத்த ஒன்றரை மாதத்திற்கு வண்டி, வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும்.
கீழே விழுவது, எலும்புகள் உடையும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். திருமணம், காது குத்து என சுப நிகழ்ச்சிகளுக்கு பயணம் செய்து கொண்டே இருப்பீர்கள். சந்தோஷமாக இருக்கக்கூடிய காலகட்டம். நல்ல வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். இதுவரை பார்க்காத சந்தோஷங்களை வரும் நான்கு மாதங்களில் பார்க்கக்கூடிய யோகம் ஏற்படும்.
எல்லா பிரச்சனைகளையும் கடந்து நிம்மதியாக வாழக்கூடிய காலகட்டம். டிசம்பர் மாதத்திற்குப் பிறகு 80 சதவீத பிரச்சனைகள் சரியாகும். மே மாதத்திற்குப் பிறகு விடுதலை பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். லட்சுமி நாராயணப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். கல்கண்டு சாதம் செய்து 5 சுமங்கலிக்கு தானமாக கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.
திருமண யோகம் உண்டு. வேலை போகும் வாய்ப்புள்ளதால் சொந்த தொழில் செய்யும் அமைப்பு உள்ளது. சொத்துக்கள் சேரும். மதிப்பு, மரியாதை கூடும். வெளிநாடு செல்லும் அமைப்பு உள்ளது. ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. புதிய உறவுகளால் ஏற்றம் ஏற்படும். பாக்கியத்தில் சுக்கிரன் புதன் இணைவதால் வாழ்க்கை அழகாக இருக்கும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 90 சதவீதம் முன்னேற்றம் ஏற்படும்.
