விநாயகர் சதுர்த்தி: நாளை சென்னை மெட்ரோ ரெயில் அட்டவணை மாற்றம்

Summary

விநாயகர் சதுர்த்தியை அன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும என தெரிவித்துள்ளது.

Source link