திருநெல்வேலி: முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றால் என்றால், யார் யாரை எல்லாம் சந்தித்தார். எவ்வளவு கோடி ரூபாய் வருகிறது என்பதை அவர் அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் திருநெல்வேலியில் அளித்த பேட்டி:
சட்ட மன்றத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பலர் பார்த்து ரசிக்கிறார்கள், பலர் அதற்கு ஆதரவு தெ ரிவிக்கிறார்கள், பலர் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள்.
ஒரு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற 4 மாதங்களுக்குள்ளாகவே, இன்றைய சூழ்நிலையில் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இன்னும் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது.
ஒரு சட்டமன்ற தே ர்தல் நடந்து முடிந்து இரண்டு முன்று மாதங்களுக்குள்ளாகவே இ டை த்தே ர்தல் வருகிறது என்றால் அங்கு குதிரை பே ரம் நடைபெற்று இருக்கிறது என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்த குதிரை பேரம் எதற்காக என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும்.
அதேபோல சட்டமன்றத்தல் முதல்வர் பேசும்போதும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர் குடும்பத்தைப்பற்றியும் ஒருவருக்கொருவர் மாறிமாறி குடும்பங்களைப்பற்றி பேசும்போதும், மாமா கிட்டபோய் கேளு, அப்பாகிட்டபோய் கேளு என்று சொல்வதும், பைபிளில் உள்ள வசனங்களை சொல்வதும் இதெல்லாம் ஏற்புடையதா என்பதை நாட்டுமக்கள் நீங்கள் தான் சிந்தித்து பார்க்க வேண்டும்.
மீடியாக்களிடம் பலவிசயங்களை சொன்னால் அவர்கள் ஒன்றிரண்டு விசயங்களை மட்டும் ஹைலட் பன்றாங்க. அதை பலபேர் மீம்ஸ் போடறாங்க, சிலர் கண்டனம் தெ ரிவிக்கிறாங்க. ஆனா மீடியாக்களுக்கு உள்ள பொறுப்பு என்னான்னா, எந்தவிசயத்தை போட்டாலும் முழுசா போடுங்க. முழுசா போட்டாதான் மக்களுக்கு என்ன சொன்னாங்கன்னு முழுசா தெரியும்.
இந்த மாதிரி நிலையில சட்டமன்றம் முடிந்திருக்கிறது. நம்முடைய முதல்வர் லண்டன் போயிருக்கிறாங்க, சொந்த வேலையா போயிருக்கிறாரா, இல்ல யார் யாரோ போயிருக்கிறதா சொல்றாங்க, யாரெல்லாம் கூட்டிட்டு போனது தெரியாது. அரசு செலவுள்ள யாரெ ல்லாம் கூட்டிட்டு போயிருக்கிறாங்க, உண்மையிலேயே முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக செ ன்றிருக்காரா, இல்லையா, இந்த மூன்று, நான்கு நாட்களில் அவர் எத்தனை பே ர்களை சந்திக்க முடியும். இதெல்லாம் ஒரு கேள்விக்குறி. அதற்கெல்லாம் அவர் வந்தவுடனே அவர் பதில் சொல்ல வேண்டும். சொந்த வேலையா போயிருந்தா நாம் ஒன்றும் சொல்ல முடியாது.முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக என்று அவர் சொன்னால், யார், யாரை எல்லாம் சந்தித்தார். எவ்வளவு கோடி ரூபாய் வருகிறது என்பதை அவர் அறிவிக்க வேண்டும்.
