சென்னை: தமிழ்நாடு வளர்ந்துவிட்டது. தமிழ்நாடு கல்வியில் சிறந்துள்ளது. ஏராளமான அறிஞர்கள், முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர் என்று சொல்லி பெருமைப்பட்டு வரும் நமக்கு இன்று ஒரு அதிர்ச்சி கிடைத்துள்ளது.
‘ஒன் இந்தியா’ சார்பில் பொதுமக்களிடம் விஞ்ஞானிகள் போட்டோவையும், தமிழ் நடிகர்கள் போட்டோக்களையும் காண்பித்தபோது ஒவ்வொருவரும் நடிகர்களை பார்த்ததும் அடையாளம் கண்டு அவர்களின் பெயரை சொன்னதோடு, விஞ்ஞானிகளை யார் என்று கூற தெரியாமல் விழித்த சம்பவம் நடந்துள்ளது.
குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்களிடம் நடிகர் சூர்யா, தனுஷ் மற்றும் பிரதீப் ரங்கநாதன் போட்டோக்களை காண்பித்தபோது அவர்களின் பெயர்களை அடுத்த நொடியே சொன்னவர்கள், அவர்கள் நடித்த படங்களையும் பட்டியலிட்டனர்.
ஆனால் இந்திய விண்வெளி துறையின் தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானி விக்ரம் சாராபாய், இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தையாக விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா மற்றும் ஒளிச்சிதறல் விளைவு தொடர்பான ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வென்ற திருச்சியை சேர்ந்த சர்சிவி ராமன் ஆகியோரின் போட்டோக்களை காண்பித்ததில் யாரும் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. தப்பு தப்பாக பெயரை கூறியுள்ளனர். உண்மையில் இது கவலைக்குரிய விஷயமாகும். யார் யார் என்ன பதில்கள் சொன்னார்கள்? என்பது தொடர்பான முழு வீடியோவை கீழே பார்க்கலாம்.
