மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : சிபிஐ, சிபிஎம் போட்டியிட முடிவு -வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு – maduranthakam and dharapuram by-elections cpi and cpm decide to contest; m. veerapandian announces.

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் காலியாக அறிவிக்கப்பட்ட 7 சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லாத மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
திமுக: மதுராந்தகம் தொகுதியில் இ. பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். தவெக: மதுராந்தகத்தில் மாநில துணைப் பொதுச் செயலர் கே. மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலர் பி. சத்தியபாமாவும் களமிறக்கப்பட்டுள்ளனர். அதிமுக: மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் கே. பானுமதியும் போட்டியிடுகின்றனர்.இச்சூழலில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளார்.

Source link