லக்கி ஜாக்பாட் அடிக்கும் மிதுன ராசி.. பெயர், புகழ், பண வரவு.. அட்டகாசமான மாற்றம் காத்திருக்கு

Rasi palan this week: செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் மிதுனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மிதுனம் ராசியினர் பள்ளி, கல்லூரி, வங்கித் துறை, மருத்துவர்கள், கிளப், உற்பத்தித் துறையில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கண்ணும் கருத்துமாக வேலை பார்ப்பது நல்லது. சின்ன பிழை நடந்தாலும் பெரிய பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் வரும். அரசாங்கம், அரசியல் சார்ந்த எந்த வேலைகள் இருந்தாலும் இழுபறியாக நடக்கும். வீட்டில் நிறைய கரண்ட் கட், ஒயர் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். செப்டம்பர் 16, 17 ஆம் தேதி நல்ல பண வரவு நன்றாக இருக்கும். அடுத்தடுத்து முன்னேற்றம் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். அசுர பலம் கிடைக்கும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நேர்மையாக நின்று ஜெயிப்பீர்கள். புகழ், பெருமை, அந்தஸ்து, கெளரவம் உண்டாகும். வெளியூர் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். படிப்பு நன்றாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தைரியம் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தைரியம் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், சிக்கல்கள் தீரும்.

நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தைரியமாக முன்னேறக்கூடிய காலகட்டம். தேக ஆரோக்கியத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. விரயங்கள் அதிகமாக இருப்பதால் வெள்ளிக்கிழமை மதிய வேளையில் சாப்பாடு தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.

பண வரவு நன்றாக இருக்கும். அலர்ஜி விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. ரத்த பந்த உறவுகளுடன் அதிக கவனமாக இருப்பது நல்லது. ரத்தத்தைப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. வியாழக்கிழமை தோறும் பெருமாள், தாயார் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் முன்னேற்றத்தைத் தரும்.