மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் நாதக, அத்தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக, திமுக, தவெக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகளும் அங்கு போட்டியிடுகின்றன.இந்நிலையில், அந்த தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் சீமான்.

இதன்படி,

தாராபுரத்தில் கார்த்திகா

மதுராந்தகத்தில் ஜானகிராமன் போட்டியிடுவார் என சீமான் அறிவித்துள்ளார்.

இதில் ஜானகிராமன் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் கார்த்திக் குமாரி போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.

இதனையடுத்து இந்தஇரண்டு தொகுதிகளிலும் ஐந்துமுனை போட்டி உருவாகி உள்ளது.

Source link