விடிந்தால் விநாயகர் சதுர்த்தி! சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்! முக்கிய அறிவிப்பு வெளியானது!

சென்னை: நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதாவது சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு, ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்று மெட்ரோ ரியல் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை, பின்வரும் நேரங்களில் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை, 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்” என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமாக பண்டிகை நாட்களில் கூட்டம் அவ்வளவாக இருக்காது என்பதால், பயண நேர அட்டவணையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்றத்தை செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.