ஆப்கானுக்கு எதிரான முதல் டி- 20 கிரிக்கெட்: இந்தியா பவுலிங்

புதுடில்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் டாஸ் வெ ன்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் (செப். 13, 15, 17, டில்லி, அருண் ஜெட்லி மைதானம்) கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது.

ஆப்கனுக்கு உதவி

இத்தொடர் ஆப்கானிஸ்தானில் நடக்க வேண்டும். அங்கு பாதுகாப்பு இல்லாததால், நட்பு அடிப்படையில் இந்தியாவில் நடக்கிறது. போட்டி ஒளிபரப்பு, டிக்கெட் உட்பட அனைத்து வருமானமும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு வழங்கப்படும்.

இன்று நடக்கும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பவுலிங் தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அணியில் சேர்க்கப்படவில்லை.

Source link