திருடப்பட்ட சாமி சிலை மீட்பு : மூவர் கைது!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்கரணை கிராமத்தில் நடுபழனி பாலமுருகன் மரகத தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இங்குக் கடந்த 1ஆம் தேதி  (,01.09.2026) இரவு மர்ம நபர்களால் 2.5 அடி உயரமுள்ள மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சுவாமி சிலை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டன.இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக, உடனடியாக சித்தாமூர் காவல் நிலையத்தில் ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து ஆதாரங்களின் அடிப்படையில், குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் மேற்பார்வையில், மதுராந்தகம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் . தீபக் ரஜினி தலைமையில் 6 காவல் ஆய்வாளர்களைக் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும். வழக்கமாக இவ்வகையான குற்றச் செயல்களில் ஈடுபடும் பழங்குற்றவாளிகள் மேற்பட்ட 20க்கும் பழங்குற்றவாளிகளை விசாரித்தும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு இன்று (13.09.2026) சித்தாமூர் காவல் ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 

அதோடு திருடப்பட்ட மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சுவாமி சிலை மீட்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கின் சட்டப்படியான புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனத் தமிழக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களைப்  பாராட்டினார்.

Source link