பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்*குதல்!

கோவையில் 14 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் தவசி என்பவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, அவர் காவல்துறையினரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அதாவது, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை அறிவாளால் தாக்கிவிட்டு தவசி தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, போத்தனூர் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு தவசியைப் பிடித்துள்ளனர். இதில் காயமடைந்த தவசி, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே சமயம், அரிவாளால் தாக்கப்பட்ட காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டவரை காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, அவர் காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link