தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிசா வழக்கில் சிறை செல்லவில்லை என்று முதல்வர் விஜய் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ம.தி.மு.க எம்.பி துரை வைகோவும் ஸ்டாலின் மிசா குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திராவிட வெற்றிக் கழகம் கட்சியின் முதன்மை செயலாளர் வல்லம் பஷீர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், வைகோ மகன் அண்ணன் மு.க.ஸ்டாலின் குறித்தும், அவரது மிசா கைது குறித்தும், பாஜக கூட சொல்ல துணியாத கருத்தை அருவருக்கத்தக்க உடல் மொழியில் ஊடகத்தில் வாந்தி எடுத்ததன் விளைவே எனது நேற்றைய எதிர்வினை .
இன்று மகன் திமுகவினர் சிலர் நாகரீக பாடமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள், நான் சொன்ன செய்தி உண்மை, என்னால் சாட்சியோடு நிரூபிக்க முடியும் வைகோ அதை எதிர்கொள்ள தயாரா? இஸ்லாமியர்களை ஏன் “மாமா” என்று உறவு சொல்லி அழைக்கிறார் வைகோ? வைகோ மகனின் பெரியம்மா ஒரு இஸ்லாமியர். வைகோ மகன் நாவடக்கி பேசினால், வைகோவுக்கு நல்லது, இல்லையேல் நான் இன்னும் விளக்கமாக பேசவேண்டிய சூழல் வரும் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு ம.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குிறத்து பதிவிட்டுள்ள, ம.தி.மு.க துணைப்பொதுசெயலாளர் டாக்டர் ரொஹையா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில். துரோகிகள்
வாழ்க்கையில் நமக்கு அதிக பாடங்களை சொல்லிக்கொடுப்பது துரோகிகளே என்பதை மறுக்க இயலாது. நம் மனதின் சமநிலையை தகர்த்து தவிர்க முடியாத சூழ்நிலையில் நம் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு தவறான விளக்கம் தந்து நம் மனதை காயப்படுத்துபவர்களுக்கு நிச்சயம் காலம் தக்க பதிலடி கொடுக்கும்.
மாமனிதர் வைகோ அவர்கள் தேர்தல் காலத்தில் அவர் எடுக்கும் கூட்டணி நிலைப்பாடுகளை பற்றி ஆயிரம் விமர்சனம் செய்யுங்கள் & கவலையில்லை அது அரசியல் அப்படிதான் இருக்கும். ஆனால் வைகோ என்ற மனிதரின் தனிமனித ஒழுக்கத்தைப்பற்றி யார் தவறாக பேசினாலும் சதாரண மனிதர்கள் அந்த துரோகிகளை தண்டிப்பதை விட பலமடங்கு தண்டனையை இறைவனும் இயற்க்கையும் தருவது உறுதி.
தலைவர் வைகோ அவர்களை பற்றி இதுவரை யாரும் சொல்லாத மாபெரும் பொய் குற்றச்சாட்டை அவர்மீது சுமத்துவதற்க்கு எப்படி உங்களுக்கு மனம் வந்தது தம்பி பஷீர் அவர்களே? அண்ணன் துரை வைகோ அவர்களைப் பற்றிய புரிதல் உங்களுக்கு இன்னும் வரவில்லை என்று தான் பல விடயங்களை கடந்துவிட்டேன் ஆனால் வைகோ பற்றி இப்படி ஒரு குற்றச்சாட்டை வைப்பதற்க்கு எப்படி மனம் வந்தது? உங்களை இயக்குவது யார் என்று அனைவரும் அறிவார்கள்.
உங்கள் வீட்டு திருமணங்கள் தலைவர் வைகோ வந்துதான் நடக்கவேண்டும். அவர்தான் எங்கள் குடும்ப தலைவர் என்று மனம் உருகி பேசியது நீங்கள்தானா அல்லது வேறு ஒருவரா? உங்கள் தங்கையின் திருமணத்தின் பொழுது தலைவர் வைகோ அவர்களுக்கு இதயத்தில் பேஸ்மேக்கர் வைத்து மருத்துவமணையில் இருந்து அப்பொழுதான் வீட்டுக்கு வந்து இருந்தார் .உங்கள் திருமணத்திற்க்கும் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரவில்லை.
எனவே தங்கையின் திருமணத்திற்க்கு தலைவர் வைகோ நிச்சயம் வரவேண்டும் என வலியுறுத்தி அழைத்தீர்கள். தலைவர் வைகோ அவர்களிடம் நேரடியாக நான் சென்று உங்கள் விருப்பத்தை சொல்லி & ஒரு மருத்துவராக இருந்துகொண்டு ஆப்ரேசன் செய்த காயம் ஆறுவதற்க்கு முன்பு திருமணத்திற்க்கு அழைத்து வந்த எனக்கு கடந்த காலத்தில் தக்கபாடம் தந்து அக்கா என்று அழைப்பவர்பளை நம்ப கூடாது என்ற பாடத்தை கற்றுகொடுத்தவர் நீங்கள் என்றும் மறவேன்.
இன்றும் தலைவர் வைகோ அவர்களின் இதயம் பேஸ்மேக்கர் கருவி மூலம் இயங்கி கொண்டு இருக்கிறது ஆனால் உங்கள் இதயம் எதில் இயங்குகிறது என்று தெரியவில்லை. அபத்தமான அபாண்ட குற்றச்சாட்டு பதிவுகளை இனி நீங்கள் நிறுத்திக்கொள்வது உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நல்லது. பெண்களை குறித்து இவ்வளவு தரகுறைவாக எழுவதை உங்கள் வீட்டு பெண்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது வியப்பாக உள்ளது. யாகாவா ராயுனும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்று திருக்குறலுடன் பதிவிட்டுள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள வல்லம் பஷீர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், யார் துரோகி ?
என்ன திடீர் பாசம் சகோதரி , என்னை “தம்பி பஷீர்” என்று அழைக்கும் உரிமையை எப்போதோ இழந்துவிட்டீர்கள். என்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வைகோவிடம் சொல்லி அழுத்தம் கொடுத்தது யார் ? அதற்கு பின்னணி காரணம் என்ன என அன்றைய காலகட்டத்தை மீண்டும் நினைவுபடுத்த வேண்டுமா? என நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
