சென்னை: தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுதும், சீரான மற்றும் தடையற்ற மின் வினியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட, பல்வேறு உடனடி நடவடிக்கைகளை மின் வாரியம் மேற்கொண்டுள்ளது.
இதன் காரணமாக, மின் பற்றாக்குறை ஏது மின்றி, தற்போது மாநிலம் முழுதும், சீரான மற்றும் தடையற்ற மின் வினியோகம் வழங்கப் பட்டு வருகிறது.
மின் வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு, 24 மணி நேரமும், மின் தொகுப்பு மற்றும் மின் வினியோக நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகள் மற்றும் உரிய உத்தரவுகளை, உடனுக்குடன் வழங்கி வருகிறது.
மின்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் செயல்படும், ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தை, 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
