சென்னை: விநாயகர் சதுர்த்தியை யொட்டி, தமிழகம் முழுதும் , பொது இடங்களில், 36 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட, போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவும், பின் ஊர்வலமாக எடுத்து சென்று, நீர் நிலைகளில் கரைக்கவும், போலீசாரிடம், பொது மக்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர், அனுமதி கோரி இருந்தனர்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தல், தீயணைப்பு மற்றும் உள்ளாட்சி அமைப் புகளின் தடையில்லா சான்றுகள், காவல் துறை அறிவித்த கட்டுப்பாடுகள் ஆகியவற்றுடன், தமிழகம் முழுதும், பொது இடங்களில், 36 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட, போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
சென்னை போலீஸ் எல்லையில், 1,562 விநாயகர் சிலைகளை நிறுவ, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 16,500 போலீசார் மற்றும் 500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
சிலைகள் அமைக்கப் படும் இடங்களில், ‘சி.சி.டி.வி’ கேமராக்கள் பொருத்தவும், தன்னார்வலர்களை பாதுகாவலர்களாக நியமிக் கவும், சிலை அமைப் பாளர் களுக்கு அறிவுறுத்தப்பட்டு உ ள்ளது.
காவல் துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, செப்.,19, 20ம் தேதிகளில், அனுமதித்த வழித்தடங்களில், ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று, நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்.
அனுமதி இல்லாத இடங்களில், விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது எனவும் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்க முயல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
