பேரறிஞர் அண்ணா தான் அன்றைக்கும் – இன்றைக்கும் – என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார் – உதயநிதி

Summary

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் – தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் – மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பேரறிஞர் அண்ணா எனவும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!

கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் – அண்ணா!

தமிழ்நாடு என்று பெயர் சூட்டி – சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து – இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் – இன்றைக்கும் – என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் – தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் – மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்.

வாழ்க அண்ணாவின் புகழ்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link