சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இன்று நடக்க இருந்த முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் வந்து இருக்கும் காரணத்தினால், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை.
இன்று மாலை நடக்க இருந்த திமுக முப்பெரும் விழாவும் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு துரைமுருகன் கூறினார். அதேநேரத்தில் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு சிகிச்சை ஏதும் அளிக்கப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலையும் துரைமுருகன் தெரிவிக்கவில்லை.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு; திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேட்டி
