வந்த முதல் நாளே எல்லா கன்டென்டும் கொட்டுறாங்க; என்ன சண்டடா இது? ஆனந்தியால் கடுப்பான ஆடியன்ஸ்

பிக்பாஸ் சீசன் 10 சமீபத்தில் தொடங்கியது. இதுவரை இல்லாத வகையில் பிக்பாஸ் சீசன் 10-ல் காமன் மேன்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த ஆண்டு இன்ஸ்டா பிரபலங்கள் பிக்பாஸில் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு காமன் மேன்கள் பங்கேற்று உள்ளனர். பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இந்நிகழ்ச்சி தொடக்க மேடையிலேயே சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஆ. ராசா மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு: சேகர் பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீதும் பாய்ந்த வழக்கு

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் தற்போது லட்சுமி பிரியா,  ஷாதிகா, நடிகை சாந்தினி தமிழரசன், நடிகர் பிளாக் பாண்டி, தொகுப்பாளர் வினோத் பாபு, நடிகர் குமரன், தொகுப்பாளர் ராகவன் ரகுநாதன், பிரித்விநாத், முத்தழகி,  தன்யா, ஒப்பனை அஷ்மிதா, சீரியல் நடிகர் அவினாஷ், நடிகர் முகேஷ், குக் வித் கோமாளி பிரபலம் அன்சார், சீரியல் நடிகை ஸ்வாமிதா, ஜாவித் ஆகியோர் உள்ளனர்.

நடிகர் பிளாக் பாண்டி உடல்நலக் குறைவு காரணமாக 3-வது நாளே வெளியேறினார். இதனால் முதல் வாரம் யாரும் எலிமினேட் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக புதிய போட்டியாளராக சீரியல் நடிகை ஆனந்தி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஆனந்தி வீட்டில் நுழைந்ததுமே ஆட்டிடியூட் காட்ட ஆரம்பித்துவிட்டார். முதல் நாளே லட்சுமி பிரியாவிற்கு ஆனந்திக்கும் முட்டிக் கொண்டது.

அதன் பின்னர் அன்று இரவு மற்றொரு போட்டியாளருடன் ஆனந்தி சண்டை போட ஆரம்பித்துவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் வந்த வந்த முதல் நாளே எல்லா கன்டென்டும் கொட்டுறாங்க; என்ன சண்டடா இது? என்று நெட்டிசன்கள் எரிச்சலுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனந்தி எவ்வளவு நாட்கள் இந்த வீட்டில் தாக்குப்பிடிப்பார் என்பது போக போக தான் தெரியும். 



Source link