கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது உடல் நிலை குறித்து தீவிரமான கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், த.வெ.க சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இந்த தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வியை சந்தித்தார் ஏற்கனவே தி.மு.க மற்றும் அ.தி.முக. என இரு கட்சிகளிலும் பயணித்த அவர், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக த.வெ.க.வில் இணைந்த நிலையில், கட்சியின் சார்பில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட வெற்றியும் பெற்றார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 9-ந் தேதி திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவத் தேவைக்கேற்ப அவருக்கு சுவாச ஆதரவு உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இதனிடையே தற்போது வி.எஸ்.பாபுவின் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதே சமயம் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் எம்.ஜி.எம். மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். முன்னதாக வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அருண்ராஜ் நேரில் சென்று விசாரித்துள்ளனர்,
