80’ஸ் த்ரிஷா நானா? எம்.ஜி.ஆரிடம் 25 ஏக்கர் வாங்கினேனா? ஆவேசப்பட்ட அம்பிகா

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகைகளாக இருந்த அம்பிகா – ராதா இருவருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 25 ஏக்கர் நிலம் வழங்கியதாக வெளியான தகவல் குறித்து நடிகை அம்பிகா நேர்காணல் ஒன்றில் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார் 

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். சினிமாவில், ஆட்சி செய்த அவர், ஒரு கட்டத்தில் தனி கட்சி தொடங்கி அரசியலில் தொடர்ந்து 3 முறை முதல்வராக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.  நடிகராக இருந்தபோது, அரசியலுக்கு வந்தபோதும், தனது வாழ்நாளில் பலருக்கு உதவி செய்துள்ள எம்.எஜி.ஆர் இன்றும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறார்.

இந்நிலையில், கேரளாவை சேர்ந்த பிரபல நடிகைகளாக இருக்கும் ராதா மற்றும் அம்பிகா இருவரும் சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். ராதா திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்தாலும், அவரது சகோதரி அம்பிகா தற்போது சினிமாவில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சீரியல்களிலும் நடித்து திரைத்துறையில் தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 

இந்நிலையில், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, சென்னையில் ராதா அம்பிகா இருவரும் ஏ.ஆர்.எஸ்.கார்டனை வாங்கியபோது முதல்வர் எம்.ஜி.ஆர் அதனை அவர்களுக்கு இலவசமாக கொடுத்த்தாகவும், இன்றைய மதிப்பில் அந்த இடம் பல ஆயிரம் கோடி போகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில், எம்.ஜி.ஆர் அம்பிகாவுக்கு 25 ஏக்கர் நிலம் வழங்கினார். இவர் தான் 80-களில் த்ரிஷா என்று கூறியுள்ளார். 

இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ள நடிகை அம்பிகா நேர்காணல் ஒன்றில், என்னைப்பற்றி சேகுவேரா என்பவர் இவ்வாறு கூறியுள்ளார். நான் 80-களில் த்ரிஷா என்றால், அப்போது விஜய் யார் என்று அவர் எனக்கு பதில் சொல்ல வேண்டும். 2-வது எம்.ஜி.ஆர் அந்த 25 ஏர்க்கரை எனக்கு எழுதி வைக்கும்போது அங்கு தாசில்தாராக இருந்தவர் அவர் தான். அப்போது வருமான வரி பிரச்னை வரும் என்பதால் அந்த பத்திரம் அவரிடம் இருக்கட்டும் என்று விட்டு வைத்தேன்.

அவரும் பின்னாளில் நான் பெரிய பத்திரிக்கையாளர் ஆவேன். அப்போது ஒரு மீடியாவில், எம்.ஜி.ஆர் கொடுத்த 25 ஏக்கர் போதாதா என்று கேட்டு சிக்னல் கொடுப்பேன் அப்போது இந்த பத்திரத்தை வாங்கிக்கொள்ள வேண்டும். என்று ஒப்பந்தம். அதன்படி இப்போது அவர் கேட்டுவிட்டார். அதனால் அந்த 25 ஏக்கர் நிலத்தின் பத்திரத்தை அவர் எனக்கு தர வேண்டும். இந்த 25 ஏக்கரை விற்றுவிட்டு ஒரு சகோதரன் என்ற முறையில் அவருக்கு ஒரு சதவீதம் பங்கு கொடுப்பேன் என்று அம்பிகா கூறியுள்ளார். 

மேலும், வீட்டிலே கஷ்டங்கள் இருக்கும்போது மற்ற பெண்கள் குறித்து பேசுவது தவறு சேகுவேரா. நான் இன்னொரு இன்டர்வியூ பார்த்தேன். அதில், ஆனால் அந்த வீடியோ இப்போது டெலிட் ஆகிவிட்டது. நம்ம சிஎம்.விஜயின் அம்மா ஷோபா அக்கா குழந்தையை அபார்ஷன் பண்ணியிருக்க வேண்டும் என்று இவர் பேசி இருக்கிறார். அந்த வீடியோவை நான் பார்த்தேன். அதன்பிறகு பார்க்கும்போது அந்த வீடியோ டெலிட் ஆகி இருந்தது. 

இதேபோல் பேசக்கூடிய சிலர் இணைதளங்களில் இருக்கிறார்கள். இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேடையில் அரசியல்வாதிகள் எவ்வளவு கெட்டவார்த்தை பேசுகிறார்களோ அதைவிட இவர்கள் அதிகமாக பேசுகிறார்கள். அவர்களுக்கு என்ன தைரியம் என்றால், நாம் பத்திரிக்கையாளர் நாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவோம் என் தைரியம் தான். அவர்கள் குடும்பத்திற்கும் சொல்கிறேன். அவர்களுக்கு சொல்லி புரியவையுங்கள் என்று அம்பிகா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

Source link