தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் – திருமாவளவன்

Summary

விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்வதாக திருமாவளவன் கூறினார்.

திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான்.

* மின்வெட்டு பிரச்சனையை சீர்செய்ய தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அதிகாரிகள் கூறுவதை கேட்டு தான் அமைச்சர்கள் பதிலளித்து கொண்டிருக்கின்றனர். அதிகாரிகள் உண்மை தகவலை கூற வேண்டும்.

* திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு.

* விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்கின்றனர்.

* பதவிக்காக விசிக கூட்டணி மாறியதாக திமுக ஆதரவாளர்கள் பேசுகின்றனர்.

* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியாக வேண்டும்.

* பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசுவது ஏற்புடையதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்

Source link