சென்னை: ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு அமைச்சர் ஆதவ் தொடர்ந்த வழக்கில், திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளிக்க அவகாசம் அளித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
போதைப்பொருள் வழக்கில் கைதான ஜான் பிரிட்டோ அமைச்சர் ஆதவ் உறவினர் என திமுக ஐடி விங் பதிவிட்டு இருந்தது. அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினும் பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து தனது உறவினர் அல்ல எனக் கூறி, ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி, முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் ஆதவ் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி விசாரித்தார். அவர் அமைச்சர் ஆதவ் மனுவுக்கு பதிலளிக்கும்படி, திமுக தலைவர் ஸ்டாலின், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 21ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட் நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் ஆதவ் போட்ட வழக்கில் ஸ்டாலினுக்கு ஐகோர்ட் அவகாசம்; உத்தரவு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
