வித்தியாசமான லுக்; அட்லீ – அல்லு அர்ஜூன் பட டைட்டில் வெளியீடு

அட்லீ – அல்லு அர்ஜூன் படம் பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் சைன்ஸ் ஃபிக்சன் ஃபேண்டஸி ஜானரில் உருவாகுவதாக சொல்லப்படுகிறது. இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இவரைத் தவிர்த்து மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் முக்கியமாக ராஷ்மிகா நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக சொல்கிறார்கள். படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. 

இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இன்றைய தினமான அல்லு அர்ஜூன் பிறந்தநாளையொட்டி ஒரு வீடியோவுடன் வெளியானது. அதில் அல்லு அர்ஜூனும் அட்லீயும் அமெரிக்கா சென்று படம் தொடர்பாக வி.எஃப்.எக்ஸ் மற்றும் பல்வேறு டெக்னாலஜி கலைஞர்களுடன் கலந்துரையாடும் காட்சிகள் இடம் பெற்றது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.  பின்பு படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது அடுத்ததாக அபு தாபி மற்றும் துபாயில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் படம் அறிவித்து ஒராண்டு கடக்கும் நிலையில் அதே அல்லு அர்ஜூன் பிறந்தநாளான இன்று படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ‘ராக்கா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அல்லு அர்ஜுன் வித்தியாசமாக மிருகத்தனமான தோற்றத்தில் இடம் பெற்றுள்ளார். இப்போஸ்டர் ஒன்பது மொழிகளில் தனித்தனியேவாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஒன்பது மொழிகளில் படம் வெளியாகுவது உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link