இந்த விஜய்தான் வேட்பாளர்; அந்த வேட்பாளர்தான் விஜய். இத்தனை ஆண்டுகளாக யார் யாருக்கோ ஓட்டு போட்டீர்கள். ஆனால் இந்த வருடம், உங்கள் வீட்டில் இருக்கும் ஒருத்தருக்கு, நமது குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு நாம் ஓட்டு போடப் போகிறோம். அந்த வேட்பாளருக்கு நீங்கள் ஓட்டு போடுவது நமதுக்கு நாமே ஓட்டு போடுவதுபோல. அந்த வேட்பாளர் வெற்றி பெற்றால் நாம் வெற்றி பெற்றது போல.
இப்படி ஒரு எமோஷனலான ஒரு தேர்தல தமிழ்நாடு அல்ல இந்தியாவே பார்த்திருக்காது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஒருமுறை வரும் தேர்தலைப் போல இதைநினைத்துவிடாதீர்கள். இது வேற. இது ஒரு அதிசய தேர்தல். 50 வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலைப் போன்றது. எனவே இந்த வாய்பை்பை தவற விட்டுவிடாதீர்கள்.
இந்த தேர்தலில் நமது தவெக ஆட்சி அமைந்தால், அது என்ன அமைந்தால் அமைக்கிறோம். தவெக ஆட்சி அமைந்த உடனே பெண்கள், இளைஞர்கள் எல்லோருமே நல்லா இருப்போம்.
விவசாயிகள், மீனவர்கள் உழைக்கிற மக்கள் எல்லோருமே நல்லா இருப்போம். இன்னும் பல வருடங்களுக்கு நமது குடும்பங்கள், நமது சந்ததிகள், தலைமுறைகள் எல்லோருமே நல்லா இருப்போம். எனவேதான் சொல்கிறேன், உங்கள் வோட்டை வேற யாருக்கும் போட்டு வீணாக்கிவிடாதீர்கள். அதனால்தான் வாக்குறுதிகளை பார்த்து பார்த்து அறிவித்து வருகிறோம். செய்ய முடியாததை சொல்லவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
சொல்லாததையும் செய்வோம். அது வேறு விஷயம். ஆனால், செய்யறதை மட்டும்தான் சொல்லுவோம். இந்த விஜய் வாக்குறுதிகளை சாத்தியமாக்கிக் காட்டுவான். இதை ஏன் இவ்வளவு வலிமையாக நான் சொல்கிறேன் என்றால், மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொட வேண்டிய அவசியமே எனக்கு இல்லை. மக்களுக்கு தப்பே நடக்காது.தப்பே நடக்க விட மாட்டேன். மக்கள் பணத்தை ஒரு பைசா கூட நான் தொட மாட்டேன் என நான் சொல்வதைப் போல இப்போது ஆண்டு கொண்டிருப்பவர்களும் முன்பு ஆண்டவர்களும் தில்லா சொல்ல முடியுமா? என்னை எதிர்ப்பவர்களால் இப்படி சொல்ல முடியுமா?” இவ்வாறு விஜய் பேசினார்.
