ஏ.டி.எம் கார்டு, ஓ.டி.பி நம்பரைப் பயன்படுத்தி மோசடி – ரூ.10.96 லட்சத்தை இழந்த கரூர் முதியவர்!

கரூர் மாவட்டம், குளித்தலை, காவேரி நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது: 71). இவருடைய மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, “உங்கள் ஏ.டி.எம் கார்டு லாக் ஆகி விட்டதால், அதை சரி செய்ய ஏ.டி.எம் கார்டு எண் மற்றும் ஓ.டி.பி நம்பர் வேண்டும்” எனக் கேட்டுள்ளனர். அதை உண்மை என நம்பிய ராமசாமி, ஏ.டி.எம் கார்டு எண் மற்றும் ஓ.டி.பி நம்பரை தெரிவித்துள்ளார். இதையடுத்து, ராமசாமியின் சேமிப்பு கணக்கில் இருந்த, 10 லட்சத்து, 96 ஆயிரத்து, 90 ரூபாயை மர்ம நபர்கள் எடுத்தனர்.

karur

அதற்குரிய குறுஞ்செய்தி ராமசாமி மொபைல் எண்ணுக்கு வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ராமசாமி அளித்த புகாரின்படி, கரூர் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ராமசாமியை ஏமாற்றி பணம் பறித்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர். ஏ.டி.எம் கார்டு நம்பர் மற்றும் ஓ.டி.பி மூலம் முதியவரின் வாங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link