சொகுசு கார் மோதி விபத்து தம்பதி பலி; மகள் காயம்

நத்தம்: சொகுசு கார் மோதியதில், செந்தில்வேல், 55, அவரது மனைவி மதிவதனி, 45, ஆகியோர் பலியாகினர்.

திண்டுக்கல் மாவட்டம், கோட்டையூரை சேர்ந்தவர் செந்தில்வேல். ஊராட்சி செயலர். இவர், நேற்று முன்தினம் செந்துறையில் உறவினர் வீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு, மதிவதனி, ஹரிணியுடன் வீட்டிற்கு செல்வதற்காக சாலையோரம் நின்றிருந்தார். சிங்கம்புணரியை சேர்ந்த சேவுகப்பெருமாள், 38, ஓட்டி வந்த சொகுசு கார், இவர்கள் மீது மோதியது. இதில் செந்தில்வேல், மதிவதனி உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த ஹரிணியை, உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பிக்க முயன்ற சேவுகப்பெருமாள், அவரது நண்பர்கள் மசூத், 25, உட்பட நால்வரையும், செந்தில்வேல் உறவினர்கள் மடக்கி பிடித்து, சரமாரியாக தாக்கினர்.

தகவலில், நத்தம் போலீசார், சேவுகப்பெருமாளை கைது செய்தனர்.

Source link