ராகுல், அகிலேஷ், எலான் மஸ்க் ஆகியோர் இந்தியாவின் ராவணர்கள் என்று உ.பி.யின் லக்னோவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
லக்னோவில் தசரா பண்டிகை கொண்டாட்டங்களுக்காக பல இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் ஹஸ்ரத்கஞ்ச், கோமதி நகர் ஆகிய இடங்களில் விளம்பர போஸ்டர் சற்றே வித்தியாசமாக மக்களின் கண்களில் பட்டிருக்கிறது.
ராவணன், சனாதன பாரதத்தின் எதிரி என்று போஸ்டர்களுக்கு தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. காங். எம்.பி. ராகுல், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், பிரசாந்த் பூஷன், பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோர் படங்கள் ராவணனின் பத்து தலைகளில் ஒன்றாக சித்தரிக்கப்பட்டு உள்ளன.
சனாதன ரக்ஷா சங்கம் என்ற அமைப்பு இந்த பலகையை அமைத்துள்ளது. இந்திய அரசியல் பிரபலங்கள் மட்டுமல்லாது, சர்வதேச பிரபலங்களின் போட்டோக்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஜார்ஜ் சோரோஸ், இல்ஹான் உமர், முகமது யூனுஸ் போட்டோக்களும் காணப்படுகின்றன.
விளம்பர போஸ்டரால் அதிருப்தி அடைந்து சமாஜ்வாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், அவர்களே அந்த போஸ்டரை அகற்றினர்.
