சிறுமிகள் பாலியல் வழக்கில் சிக்கிய 8வது நபர்; வீரமணியின் மேனேஜர் கைது

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரது தோழி சாந்தி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தப்பிப்பதற்காக, போலீசார், அதிகாரிகளுக்கு பணமும், தங்கக்கட்டிகளையும் அவர் பரிசாக அளித்தது தெரிய வந்தது. எந்ததெந்த அதிகாரிகள் ஆதாயம் பெற்றார்கள் என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

தற்போது, போக்சோ வழக்கில் இருந்து தப்பிக்க பணப்பரிமாற்றம் செய்ததாக வீரமணியின் மேனேஜர் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். வீரமணியின் பண்ணை வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையை போலீசார் துரிதப்படுத்தி வருகின்றனர்.

Source link