சண்டிகர்: பஞ்சாப்பின் லெஹ்ரகாகா-ஜாகர் சாலையின் ஓரம் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பணியாளர்கள் 25 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வேகமாக வந்த கார் பணியாளர்கள் மீது மோதியது. இதில், 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சாலையோரம் அமர்ந்திருந்த போது, கார் மோதி விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
