பாரத ஸ்டேட் வங்கி மக்களோட ஹோம் லோன் வட்டி விகிதத்தை திடீர்னு உயர்த்தியிருக்காங்க. கடந்த வியாழக் கிழமை அன்று வட்டி விகிதம் 0.25% (25 bps) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வந்துடுச்சு. இதனால வீடு வாங்க லோன் போட்டிருக்கிறவங்க இனிமே கட்ட வேண்டிய மாத தவணை தொகை உயர வாய்ப்பிருக்கு.
இத பத்தி ரொம்ப சிம்பிளா புரிஞ்சிக்கிற மாதிரி கீழ பாக்கலாம்.
வட்டி உயர்வு யாருக்கெல்லாம் பாதிக்கும்?
எஸ்.பி.ஐ வங்கியில் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ லோன் எடுத்திருக்கிறவங்க, வட்டி விகிதம் உயர்வுக்கு ஏற்ப என்ன பண்ணனும்னா, மாதாந்திர இ.எம்.ஐ தொகையை அதிகமா கட்ட வேண்டியிருக்கும்.
கடன் தொகைக்கு ஏற்ப இ.எம்.ஐ எவ்வளவு மாறும்?
வட்டி விகிதம் 8%-ல இருந்து 8.25%-ஆக மாறும்போது, 20 வருஷம் (240 மாதங்கள்) லோன் கட்டியிருக்கிறவங்களுக்கு எப்படி பாதிக்கும்னு ஒரு சின்ன கணக்கைப் பார்க்கலாம்:
ரூ.30 லட்சம் லோன் வாங்கியிருந்தா:
பழைய இ.எம்.ஐ: ரூ.25,093
புது இ.எம்.ஐ: 25,562 ரூபாய்
மாசம் கூடுதலாக: 469 ரூபாய் கட்டணும்.
50 லட்சம் ரூபாய் லோன் வாங்கியிருந்தா:
பழைய இ.எம்.ஐ: 41,822 ரூபாய்
புது இ.எம்.ஐ: 42,603 ரூபாய்
மாசம் கூடுதலாக: 781 ரூபாய் கட்டணும்
80 லட்சம் ரூபாய் லோன் வாங்கியிருந்தா:
பழைய இ.எம்.ஐ: 66,915 ரூபாய்
புது இ.எம்.ஐ: 68,165 ரூபாய்
மாசம் கூடுதலாக: 1,250 ரூபாய் கட்டணும்.
1 கோடி ரூபாய் லோன் வாங்கியிருந்தா:
பழைய இ.எம்.ஐ: 83,644 ரூபாய்
புது இ.எம்.ஐ: 85,207 ரூபாய்
மாசம் கூடுதலாக: 1,563 ரூபாய் கட்டணும்
வட்டிச் சுமையிலிருந்து தப்பிக்க என்ன வழி?
வட்டி அதிகமாகும்போது வங்கி உங்ககிட்ட இரண்டு வழிகளைக் கேட்கும்:
மாதாந்திர இ.எம்.ஐ தொகையை கொஞ்சம் கூடுதலாகக் கட்டினா, நீங்க லோன் முடிக்க வேண்டிய வருஷம் (20 வருஷம்) மாறவே மாறாது.
பழைய இ.எம்.ஐ தொகையையே கட்டினா, வங்கி உங்களோட லோன் காலத்தை இன்னும் ஒரு வருஷம் (21 வருஷமா) நீட்டித்துவிடும்
எதுல நமக்கு லாபம்?
வங்கி லோன் காலத்தை நீட்டித்துத் தருவதை விட, மாதாந்திர EMI தொகையைச் சற்று கூடுதலாகக் கட்டுவதே ரொம்ப ரொம்ப நல்லது.
ஏன்னா, இ.எம்.ஐ தொகையை உயர்த்திவிட்டால் வட்டி ரொம்ப அதிகமாகப் போவதைத் தவிர்க்கலாம். இதன் மூலமாக உங்களோட லட்சக்கணக்கான ரூபாய் வட்டிப் பணம் மிச்சமாகும்:
30 லட்சம் லோனுக்கு: சுமார் 1.85 லட்சம் ரூபாய் மிச்சம்
50 லட்சம் லோனுக்கு: சுமார் 3.08 லட்சம் ரூபாய் மிச்சம்
80 லட்சம் லோனுக்கு: சுமார் 4.93 லட்சம் ரூபாய் மிச்சம்
1 கோடி லோனுக்கு: சுமார் 6.17 லட்சம் ரூபாய் மிச்சம்
குறிப்பு:
இது உங்க கடனுக்கு ஏத்த மாதிரி மாறலாம். அதனால, உங்க லோனுக்கு எவ்வளவு வட்டி ஏறியிருக்குனு தெரிஞ்சிக்க உடனே உங்க எஸ்பிஐ வங்கி கிளைக்குப் போய் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க.
