சென்னை: தவெக பெற்ற ரூ.13.30 கோடி நன்கொடையில் ரூ.8 20 கோடியை அமைச்சர் ஆதவ் நன்கொடையாக அளித்துள்ளார். வனத்துறை அமைச்சரான ரஞ்சித்குமார் ரூ. 5 கோடி நன்கொடை தந்துள்ளார்.
தேர்தல் கமிஷனில் தவெக தாக்கல் செய்துள்ள 2025-26ம் ஆண்டுக்கான நிதி ஆதாரங்களில் மொத்தம் ரூ. 13. 30 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த நன்கொடையில் 99 சதவீதம் அமைச்சர்கள் ஆதவ், ரஞ்சித்குமார் இருவரும் தந்தது ஆகும்.
ரூ.8.2 கோடியை அமைச்சர் ஆதவும், எஞ்சிய தொகையில் ரூ.5 கோடியை வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமாரும் தந்துள்ளனர். இதை தவிர்த்து, தூத்துக்குடி, லயன்ஸ் டவுனில் அமைந்துள்ள ஸ்னோ ஷோ நிறுவனம் கேட்பு வரைவோலை மூலமாக ரூ.5 லட்சம் நிதியை அளித்து இருக்கிறது.
ஸ்னோ ஷோ நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ள அதே முகவரியில் ஸ்னோ எக்ஸ்போர்ட்ஸ் அண்டு இம்போர்ட்ஸ் நிறுவனமும், மேலும் ரூ.5 லட்சத்தை நன்கொடையாக வழங்கி இருக்கிறது.
மொத்தத்தில் தவெக பெற்ற ரூ.13.3 கோடி நன்கொடையில் ரூ.13.2 கோடி கட்சியின் முக்கிய தலைவரும் மற்றும் அமைச்சருமான ஆதவ், வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் இருவருமே தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
