பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை:

எழிலகத்தில், அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நிருபர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நிர்வாகத்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

நேற்று, கோவை மேட்டுப்பாளையத்தில் 6.2 செமீ மழை பதிவாகியது. நீலகிரியில் 2,3 செமீ மழை பதிவாகியது. மழையின் அளவு குறைவாக உள்ளது என கலெக்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் என்ன நிலை என்பதை ஆய்வு செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பணிகளை எடுக்கிறோம்.

சென்னையில் 31 செமீ மழை பெய்தாலும் மக்களின் வாழ்க்கையில் எந்த சிக்கலும் இல்லை. அவ்வளவு மழை பெய்தாலும், உடனுக்குடன் நிவாரண பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை முதல்வர் பாராட்டினார். மழை நீர் வெளியேற்றி சகஜ வாழ்க்கை கொண்டு வரப்பட்டது.

எவ்வளவு மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது தான் முதல்வரின் நோக்கம்.

துறைவாரியாக மாதமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படுகிறது.

வருவாய் பேரிடர் மேலாண்மை துறை நிறைவேற்ற வேண்டிய பணிகளை ஆராய்ந்த அதனை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம்.

நவம்பர் முதல் வாரத்திற்கு பிறகு சூப்பர் எல்நினோ மாற்றம் உருவாகும் என புள்ளி விவரம் சொல்கிறது. அப்போது இயற்கையின் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும். இயற்கையை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது. இயற்கை பாதிப்பில் இருந்து மக்களை காக்க நேரம் ஒதுக்கி முதல்வர் பணியாற்றுகிறார். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Source link