– நமது நிருபர் –
நாகலாந்தின் சோவிமாவில் உள்ள மைதானத்தில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. டெஸ்ட் போட்டியில், நாகலாந்து மற்றும் மிசோரம் அணிகள் விளையாடுகின்றன.
அதில், மிசோரம் அணியின் சின்மய் சுதார்(29), 517 பந்துகளில் 400 ரன் எடுத்து சாதனை படைத்தார். அதில் 45 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும்.இதற்கு முன் 1948- 49 ல் மஹாராஷ்டிரா வீரர் பி.பி.பிம்பல்கர், கதியவர் அணிக்கு எதிரான போட்டியில் 443 ரன் எடுத்து இருந்தது சாதனையாக இருந்தது. அதற்கு பிறகு, முதல்தர கிரிக்கெட் போட்டியில், 78 ஆண்டுகளாக எந்தவொரு வீரரும் இந்த சாதனையை தொட முடியவில்லை.
400 ரன் குவித்த சுதன் சுதார், முதல்தர கிரிக்கெட்டில் உலகளவில் 400 ரன்னுக்கு மேல் குவித்த வீரர்களின் 10வது இடத்தை பிடித்துள்ளார். இவர் 400 ரன் கடந்த நிலையில், மிசோரம் அணி 581 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது.
சுதன் சுதாரின் தந்தை ராஜேஷ் சுதார், சுழற்பந்து வீச்சாளர். மும்பை அணிக்காக பிரபல வீரர் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து விளையாடி உள்ளார். சுதன் சுதார், வங்கதேசத்தில் நடந்த 23 வயதுக்கு உட்பட்டோருக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தார்.
