கித்தோ: தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள குவாயாகிலில் உள்ள கத்தோலிக்க சர்ச் ஒன்றில் நேற்று முன்தினம் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. இது நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இப்பிரார்த்தனையில் பாதிரியார் பேட்ரிசியோ அல்ப்ரெடோ சான்செஸ் மொலினாரி, 52, வாழ்வின் நிலையற்ற தன்மை மற்றும் மரணம் குறித்து பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.
பிரார்த்தனை தொடங்கிய அரை மணி நேரத்தில் பாதிரியாரின் பின்னால் இருந்த இயேசு கிறிஸ்துவின் சிலையுடன் கூடிய பெரிய சிலுவை ஒன்று அவர் தலை மீது பலமாக விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேய நசுங்கி உயிரிழந்தார்.
சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த மரத்தாலான அந்த சிலுவை திடீரென கழன்று விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சர்ச் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
