காவியா கிரீஸில் திருமணம்; செனனையில் வரவேற்பு: பிரபலங்களுக்கு பரிசளிக்க சன் குழுமம் திட்டம்?

இசையமைப்பாளர் அனிருத் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இணை உரிமையாள காவியா மாறன் திருமணம் தொடர்பான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இவர்கள் திருமணம் எங்கு எப்போது நடக்கிறது? வரவேற்பு நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து வருபவர் அனிருத். நடிகர் ரஜினிகாந்தின் உறவினரான இவர், பேட்ட படம் தொடங்கி ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவருக்கும், சன் குழும நிர்வாக இயக்குனர் கலாநிதிமாறன் மகள் காவியா மாறனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் தொடரில் சன் ரைசஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாக இயக்குனகராக இருக்கும் காவியா மாறன், ஐபிஎல் சீசன் ஏலம் மற்றும் போட்டிகள் நடைபெறும்போது, தனது அணியை ஊக்கப்படுத்தும் வகையில் மைதானத்தில் அமர்ந்திருப்பார். அனிருத் – காவியா திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவருக்கும் இரு குடும்பத்தாரும் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர்.  

இந்நிலையில், அனிருத் காவ்யா மாறன் திருமணம் குறித்த வதந்திகள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் இருவருக்கும் நவம்பர் 11 அன்று கிரீஸ் நாட்டில் திருமணமும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 21 அன்று சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. 

இது குறித்து ‘ஃபிலிமிபீட்’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, கலாநிதி மாறன் தனது மகள் காவ்யா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் திருமணக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் முக்கிய விருந்தினர்களுக்கு பிரத்யேக ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ வழங்குவது குறித்து குடும்பத்தினர் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

இந்த பரிசுகள் திரைத்துறை, தொழில் துறை மற்றும் அரசியல் வட்டாரங்களைச் சேர்ந்த பிரபலங்களுக்காக திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்தப் பரிசுகளின் விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இந்த ஏற்பாடுகள் குறித்து குடும்பத்தினர் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. 

திருமணக் கொண்டாட்டங்கள் சினிமா, தொழில் மற்றும் அரசியல் உலகைச் சேர்ந்த விருந்தினர்களை ஒன்று சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரீஸில் நடைபெறும் திருமணச் சடங்கும், சென்னையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியும் இரு குடும்பத்தினரும் அழைப்பாளர்களுடன் இணைந்து கொண்டாடுவதற்கான இரண்டு முக்கிய நிகழ்வுகளாக அமைய உள்ளது.

Source link