தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி வில்லனாக ஆக்ஷன் அவதாரம் எடுத்து தற்போது காமெடியில் கலக்கிக்கொண்டிருக்கும் ரவி மரியா தனது பெயருக்கான காரணத்தை ரியாலிட்டி ஷோ ஒன்றில் கூறியுள்ளார். அதில் உலகத்திலேயே ரவி மரியா என்றால் அது நான் மட்டும் தான் என்றும் கூறியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி திரைப்படத்தின் மூல் உதவி இயக்குனராக இருந்தவர் ரவி மரியா. தொடர்ந்து, ஜீவா நடிப்பில், 2002-ம் ஆண்டு வெளியான ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், எஸ்.ஜே.சூர்யா இயக்கிய நியூ, அன்பே ஆருயிரே ஆகிய படங்களில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். 2006-ம் ஆண்டு வெளியான வெயில் படத்தில் முக்கிய வில்லனாக நடித்தார்.
இந்த படம் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, அடுத்தடுத்து வில்லனாக ரவி மரியா பல வாய்ப்புகளை பெற்றிருந்தார். அந்த வகையில் இவர் நடித்த பழனி, மாயாண்டி குடும்பத்தார், சண்டை, கோரிப்பாளையும் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார். 2012-ம் ஆண்டு வெளியான மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் காமெடி வில்லனாக நடித்த ரவி மரியா தற்போதுவரை, காமெடி வில்லன் கேரக்டரில் தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.
தற்போது பிஸியான நடிகராக பல படங்களில் நடித்து வரும் ரவி மரியா, செலிபிரிட்டி மாஸ்டர் செப் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார், இதில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகை சமந்தா, ரவி மரியா ரொம்ப இன்ட்ஸ்ரஸ்டிங்கான பெயர் என்று சொல்ல, அதற்கான காரணத்தை சொன்ன ரவி மரியா, ரவி என்ற பெயரில் தமிழ்நாட்டில் மூலைக்கு 15 பேர் இருப்பார்கள். நான் முதல் படத்தில் உதவி இயக்குனராக ஆனபோது டைட்டில் கார்டில் உனக்கு என்ன பெயர் போட வேண்டும் என்று கேட்டார்கள்.
ரவி என்று சொன்னால், பலர் இருப்பார்கள், நான் தான் என்று சொன்னால் ஊரில் யாரும் நம்பமாட்டார்கள். அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்து, எனக்கு காதல் திருமணம், என் மனைவி பெயர் மரியா, அதை என் பெயருடன் சேர்த்துக்கொண்டேன். யுனிக்கான பெயர். உலகத்திலேயே ஒரே பெயர் ரவி மரியா நான் மட்டும் தான் என்று கூறியுள்ளார். மேலும், 29 வருஷமா என் மனைவி எனக்கு சமைத்து போட்டு இருக்கிறார். நான் சாப்பிட்டு மட்டுமே இருந்திருக்கிறேன். ஓய்வு வாழ்க்கையில் அவருக்காக நான் சமைக்க வேண்டும் என்பதால் இந்த ஷோவுக்கு வந்தேன் என கூறியுள்ளார்.
Myy Devathai 🫶 Myy Angelll 🥰 @Samanthaprabhu2 Cutie Sam 💟🙇♂️ Celebrity Masterchef Contestants Actor #Ravimariya About Ourself ✨ https://t.co/bnuhd509Cs
— 𝕻𝖊𝖆𝖈𝖊𝕻𝖗𝖆𝖐𝖆𝖘𝖍 (@sweetysmileboy) October 20, 2026
மேலும் இந்த ஷோவில் அவரது மகளும் பங்கேற்க இருவரும் பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். 5 படங்களில் படப்பிடிப்பை தள்ளிவைத்துவிட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறியுள்ள ரவி மரியா, கண் கலங்கிய வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
