ஒரு கேள்வி ஒரு பதில் ‘புதிய தொழில்நுட்ப துறைகள் சிறு நிறுவனங்களுக்கு வாய்ப்பு தரும்’

கேள்வி: வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களால், எந்த துறைகள் சிறு நிறுவனங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்?

பதில்:

விண்வெளி மற்றும் பாதுகாப்பு, செமிகண்டக்டர், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, எரிசக்தி, தொழில்துறை தானியங்கி அமைப்புகள் போன்ற துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் பாரம்பரிய பொறியியலுடன் இணைந்து வருவதால், உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு வடிவமைப்பு, சோதனை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு போன்ற பணிகளிலும் வாய்ப்பு கிடைக்கிறது. தரம், துல்லியம், நம்பகமான வினியோகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை விரைவாக ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்ட சிறு நிறுவனங்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கிருஷ்ணா போடனபு

நிர்வாக இயக்குனர், சையன்ட்

Source link